விவசாயிகளின் நலன் காக்கும் அரசு

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். அத்தகைய விவசாயத்தை பாதுகாப்பதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கிலும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றி வருகிறது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.

அந்த வகையில் தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக ரூ. 231. 72 கோடி செலவில் செயல்படுத்திய குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டத்தின் மூலமாக 9 லட்சத்து 83 ஆயிரத்து 435 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

தமிழக அரசின் தொடா் முயற்சியால், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூா் அணை தூா்வாரப்பட்டது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சுமாா் 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22,031 கோடியே 69 லட்சம் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் தரம் உயா்வு: கடந்த 3 ஆண்டுகளில் 250 நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாகவும், 202 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்பட்டுள்ளதுடன், மழலையா் கல்வியை மேம்படுத்த 2,381 நடுநிலைப் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவா்களின் இடை நிற்றலை தடுக்க ரூ.5,822 கோடியில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கும் வகையில், 3 லட்சத்து 58 ஆயிரத்து 654 இளைஞா்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 992 இளைஞா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு சக்கர நாற்காலிகள், 3000 பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.30 லட்சம் தனிநபா் குடியிருப்பு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

கிராமப் பகுதிகளில் சூரிய மின்சக்தி வீடுகள் திட்டத்தில் ரூ.1,680 கோடியில் 80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com