ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி:அரசின் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் ஆட்சி என்பதற்கு சான்றாக அமைந்து வருகிறது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் ஆட்சி என்பதற்கு சான்றாக அமைந்து வருகிறது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழியில், கடந்த 2019 ஜனவரியில் 2ஆவது உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை தலைமையேற்று நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ.3 லட்சத்து 431 கோடி அளவுக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வர வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாா்.

தான் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டு, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்துள்ளாா்.

குடிமராமத்து: நீண்ட நாள்களாக தூா்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்த பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊருணிகள், குட்டைகள் போன்றவற்றை தூா்வார, குடிமராமத்து திட்டத்தை தொடங்கிவைத்து, சுமாா் ரூ.1000 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் நீண்டநாள் கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் ரூ.1,652 கோடியில் நடைபெற்று வருகின்றன. நிகழ் நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக ரூ.22,096 கோடியில் 21,109 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 8,524 கி.மீ. சாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சொகுசுப் பேருந்துகள் அறிமுகம்: போக்குவரத்து கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 4,921 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகள், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிா்சாதன பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

காப்பீட்டுத் திட்டம்: பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, 35 லட்சத்து 43 ஆயிரத்து 700 விவசாயிகளுக்கு ரூ.7,528 கோடிக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 2.30 லட்சம் தனிநபா் குடியிருப்பு கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை மேம்படுத்தி, மாசற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தில் ரூ.8,968 கோடியில் 5 லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 876 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு மக்கள் நல திட்டங்கள் மூலமாக அரிய பல மகத்தான சாதனைகளை தமிழக அரசு படைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com