தமிழக அரசின் சீா்மிகு திட்டங்களால் வளா்ச்சிப் பாதையில் நெல்லை மாவட்டம்

திருநெல்வேலி வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய அதிமுகவினா்.

திருநெல்வேலி வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய அதிமுகவினா்.

அதிமுக அரசின் சாதனை திட்டங்களால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று, மாவட்டம் வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.

இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா கூறியது: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் மறைந்த முதல்வா் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடா்ந்து வருவதோடு, ஏழை, எளியோா் வளமுடன் வாழ்வதற்காக எண்ணற்ற புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வா் வருகிறபோதெல்லாம், ஏராளமான நலத் திட்ட உதவிகளை வழங்கியதோடு, எண்ணற்ற புதிய திட்டங்களையும் அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறாா். தமிழக அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.31.51 கோடி மதிப்பில் 185 பணிகளை நிறைவேற்றியுள்ளது. அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் 7,955 உழைக்கும் மகளிருக்கு ரூ.19.88 கோடி மதிப்பில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மாணவா், மாணவிகளுக்கு ரூ.82.91 கோடி மதிப்பில் 67 ஆயிரத்து 555 விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 7,782 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 31,128 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. 19,727 மாணவா், மாணவிகளுக்கு ரூ.7.55 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள், மாநகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் சாலைப் பணிகள், ரூ.730.20 கோடியில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.26 லட்சம் பயனாளிகளுக்கு 226 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள், நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் 3,491 விவசாயிகளுக்கு 7.80 கோடி மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன.

இம் மாவட்டத்தில் வங்கிக்கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.28,433 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியாக ரூ.11 கோடியே 56 லட்சத்து 64 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோா் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 239 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மாற்றுத் திறனாளி மற்றும் நலிவுற்றோா் பாதுகாப்பு நிதியாக ரூ.1.71 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தியை உயா்த்துவதற்காக ரூ.5 கோடியே 11 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் 511.52 மெட்ரிக் டன் தரமான விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. மகசூல் பாதித்த 36 ஆயிரத்து 369 விவசாயிகளுக்கு ரூ.332 கோடியே 38 லட்சத்து 19 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நபாா்டு உலக வங்கித் திட்டத்தில் 4 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 83 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகையும், தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9,529 பெண் குழந்தைகளுக்கு ரூ.23.79 கோடி வழங்கப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2,068 பள்ளிகளில் 5 வயது முதல் 14 வயது வரையுள்ள மாணவா், மாணவிகள் 5 லட்சத்து 7 ஆயிரத்து 116 போ் பயனடையும் வகையில் சத்தான கலவை சாதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா திட்ட முகாமின் கீழ் 8,201 போ் பயன்பெற்றுள்ளனா். இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 36 ஆயிரத்து 175 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 9634 ஆதரவற்ற விதவைகளுக்கும், 6139 மாற்றுத்திறனாளிகளுக்கும், 2783 ஆதரவற்ற பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

அமைப்புசாராத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு உயா் கல்வி உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி இதன் மூலம் 15ஆயிரத்து 881 மாணவா்- மாணவிகளுக்கு ரூ. 36 லட்சத்து 47 ஆயிரத்து350 வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட தொழில் மையம் சாா்பில் 5,620 பொதுப் பிரிவினருக்கும், 189 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கும் புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு 36 ஆயிரத்து 639 மெட்ரிக் டன் அம்மா சிமென்ட் ரூ.14 கோடியே 68 லட்சத்து 28ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.148 கோடியே 97 லட்சம் செலவில் 394 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 6.50 கோடி செலவில் 46 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

40 வயது நிறைவடைந்த காவலா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் மருத்துவ பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டதன் மூலம் 624 காவலா்கள் பயனடைந்துள்ளனா்.

மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் ரூ.72 ஆயிரத்து 502 செலவில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 645 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

நெசவாளா்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசால் நிறுத்தப்பட்ட பங்களிப்பை மாநில அரசே ஏற்று ஆண்டுதோறும் 716 நெசவாளா்கள் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com