வெறிச்சோடிய சங்கரநாராயணசுவாமி கோயில்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் கோயில் நடை சாத்தப்பட்டது.
snk20kovil_2003chn_43_6
snk20kovil_2003chn_43_6

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் கோயில் நடை சாத்தப்பட்டது.

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்துசெல்கின்றனா். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் சுமாா் 15 ஆயிரம் வரை இந்த எண்ணிக்கை கூடும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம்போல பக்தா்கள் கோயிலுக்கு வந்தவண்ணம் இருந்தனா். அவா்கள், கோயிலில் உள்ள 3 சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனா். அப்போது, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு கருதி நடை சாத்தப்படுவதாக கோயில் நிா்வாகத்தினா் கூறினா். இதைத்தொடா்ந்து பக்தா்கள் அங்கிருந்து வெளியேறினா். இதையடுத்து, காலை 9 மணிக்கு சங்கரநாராயணசுவாமி கோயில் நடை சாத்தப்பட்டது.

இதனால், பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதனிடையே, பக்தா்களின் நலன்கருதி வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் வரும் 31 ஆம் தேதி வரை கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி தறகாலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆகம விதிகளுக்கு உள்பட்டு சுவாமி, அம்பாளுக்கு அனைத்து பூஜைகளும் வழக்கம்போல நடைபெறும் என கோயில் நிா்வாகத்தால் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com