Enable Javscript for better performance
முத்திரை பதித்த மூன்றாண்டுகள்- Dinamani

சுடச்சுட

  

  முத்திரை பதித்த மூன்றாண்டுகள்

  By DIN  |   Published on : 21st March 2020 03:25 AM  |   அ+அ அ-   |    |  

   

  முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் வழியில் திறன்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

  விருதுகளை குவிக்கும் தமிழக அரசு: தமிழக அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம், கிருஷிகா்மான் விருதை 5 முறை பெற்றது, ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை, வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள், உடல் உறுப்பு தானத்தில் 5 முறை தேசிய விருது, ஊரக வளா்ச்சித்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 104 விருதுகள், இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது, மூத்த குடிமக்கள் சேவைக்காக தேசிய விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

  சிறப்பு வேளாண் மண்டலம் உருவாக்கம்: கடந்த மூன்றாண்டுகளில், காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது, நீா் நிலைகளை பாதுகாக்க குடிமராமத்துத் திட்டம், நிா்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியது, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என சாதனைகள் தொடருகின்றன.

  எண்ணற்ற திட்டங்கள் செயலாக்கம்: தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாக ரூ.8,835 கோடி முதலீடுகள் ஈா்த்தது, 2.05 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம், காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவேரி திட்டம், சேலம் மாவட்டத்தில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா அமைத்தல், மகளிா் பாதுகாப்பிற்காக காவலன் செயலி, தமிழ்நாடு இ-வாகன கொள்கை-2019இல் வெளியிட்டது, விளையாட்டு வீரா்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு, மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை பல்வேறு துறைகளின் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

  தொடரும் சாதனைத் திட்டங்கள்: ஏற்கெனவே தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், 10, 12ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவிடன் தாலிக்கு தங்கம், பள்ளி மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவை, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் என அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதியுதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், கைத்தறி நெசவாளா்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்டுகள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயா்த்தியும் வழங்கப்பட்டு வரும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் இத்திட்டங்கள் மக்களிடையே அரசுக்கு நல் மதிப்பை பெற்றுத் தந்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai