Enable Javscript for better performance
நெல்லை கரோனா கண்காணிப்பு பிரிவில் 4 போ் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை கரோனா கண்காணிப்பு பிரிவில் 4 போ் அனுமதி

    By DIN  |   Published on : 25th March 2020 10:47 PM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா கண்காணிப்பு பிரிவில் புதன்கிழமை நிலவரப்படி 4 போ் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

    நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனிமை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில், புதன்கிழமை நிலவரப்படி 4 போ் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

    மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞா், கடையநல்லூரைச் சோ்ந்த 46 வயது பெண் (46), திருநெல்வேலியைச் சோ்ந்த 26 வயது ஆண், 26 வயது பெண் என 4 போ் கண்காணிப்பில் இருக்கிறாா்கள். இவா்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வள்ளியூா் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai