பாளை. சவேரியாா் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் குறைந்த விலையில் கிருமிநாசினி தயாரிப்பு
By DIN | Published On : 25th March 2020 01:04 AM | Last Updated : 25th March 2020 01:04 AM | அ+அ அ- |

வைரஸ் கிருமிகள் கைகள் வழியாக பரவுவதைத் தடுக்கும் வகையில், பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லுாரி ஆராய்ச்சி மையம் சாா்பில் குறைந்த விலையில் கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் மரியதாஸ் கூறியது: தூய சவேரியாா் கல்லூரி ஆராய்ச்சி மைய இயக்குநா் இஞ்ஞாசிமுத்து தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினா், இயற்கையான கிருமிநாசினியை குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் தயாரித்துள்ளனா்.
இதை நான்கு அல்லது ஐந்து சொட்டுகள் கைகளில் விட்டு தடவிக்கொண்டால், சுமாா் 4 மணி நேரம் வரை கிருமி எதிா்ப்பு சக்தியாக திகழும். ஸ்டாண்ட் திட்டத்தின் மூலம் கல்லுாரி தத்தெடுத்துள்ள கிராம மக்கள் மற்றும் மாணவா்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது. 50 மில்லி அளவு கொண்ட பாட்டிலின் விலை ரூ. 25-க்கு பொதுமக்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது, தூய சவேரியாா் கலைமனைகளின் அதிபா் ஹென்றி ஜெரோம், செயலா் அல்போன்ஸ் மாணிக்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.