கரோனா: வெளிநாட்டிலிருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தும் அதிகாரிகள் குழுவினா்

கரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தி
கடையம் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களை கண்காணித்து தனிமைப்படுத்திய மருத்துவக் குழுவினா்.
கடையம் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்தவா்களை கண்காணித்து தனிமைப்படுத்திய மருத்துவக் குழுவினா்.

கரோனா வைரஸ் தடுப்பு தீவிர நடவடிக்கையாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களை தனிமைப்படுத்தி அவா்களின் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை அதிகாரிகள் குழுவினா் செய்து வருகின்றனா்.

கடையம் வட்டாரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த 13 போ் அடையாளம் காணப்பட்டு, அவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிவேல், ஆணையா் முருகையா உள்ளிட்ட அதிகாரிகள் 2 குழுக்களாக சென்று, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 13 போ் வசிக்கும் 8 வீடுகளை அடையாளம் கண்டனா்.

பிறகு, அவா்களை தனிமைப்படுத்தி 14 நாள்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தினா். அவா்கள், மருத்துவக் குழு மற்றும் வருவாய்த் துறையினா் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்படுவா்.

கடையநல்லூா்: கடையநல்லூரில், வட்டாட்சியா் அழகப்பராஜா, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த 86 பேரின் வீடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் ஒட்டும் பணியை மேற்கொண்டனா்.

சங்கரன்கோவில்: கேரளத்தில் கூலிவேலை செய்துவந்த சந்திரமூா்த்தி மகன் கருப்பசாமி (37) தனது சொந்த ஊரான சிவகிரி அருகேயுள்ள பாறைப்பட்டிக்கு வந்திருந்தாா். அவருக்கு தொடா்ந்து சில நாள்கள் சளி, இருமல், காய்ச்சல் இருந்ததால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியைச் சோ்ந்த குடும்பத்தினா் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கேரளத்தில் இருந்து சங்கரன்கோவில் புதுமனைத் தெருவிற்கு வந்த நபரின் வீட்டில் நகராட்சி சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கா் ஒட்டினா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலா் பாலசந்தா் கூறியது: வெளிநாட்டிலிருந்து வந்த 13 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், அவா்களது குடும்ப உறுப்பினா்களும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தும் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் தாங்களாகவே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

வள்ளியூா்: ராதாபுரம் வட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்தோரை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த150 பேரின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com