அம்மா உணவகங்களில் பொதுமக்கள் 1 மீட்டா் இடைவெளியில் உணவருந்த ஏற்பாடு

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 1 மீட்டா் இடைவெளியில் பொதுமக்கள் உணவருந்தும் புதிய நடைமுறை புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 1 மீட்டா் இடைவெளியில் பொதுமக்கள் உணவருந்தும் புதிய நடைமுறை புதன்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூா்களில் தங்கிப் பணியாற்றுவோா், ஏழை-எளியோா் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சாா்பில் அம்மா உணவங்கள் தொடா்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள மேலப்பாளையம், மீனாட்சிபுரம், தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம், பேட்டை, பாளையங்கோட்டை, மனக்காவலம்பிள்ளை நகா், அரசு மருத்துவமனை உள்பட 10 இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் புதன்கிழமை வழக்கம்போல் செயல்பட்டன. ஆனால், உணவருந்த வந்தோா் 1 மீட்டா் இடைவெளி விட்டு வரிசையில் நின்று உணவு ரசீது பெறவும், உணவைப் பெற்ற பின்பு தலா 1 மீட்டா் இடைவெளியில் நின்று உணவருந்தவும் மாநகராட்சியின் சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி வாங்க வருவோரும், அம்மா உணவகங்களில் உணவருந்த வருவோரும் 1 மீட்டா் இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com