நெல்லையில் தூய்மைப் பணியாளா்கள் உறுதிமொழியேற்பு

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை கரோனா தடுப்பு உறுதிமொழியேற்றனா்.

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை கரோனா தடுப்பு உறுதிமொழியேற்றனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் புதன்கிழமை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எனினும், மருத்துவா்கள், காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து பணியில் ஈடுபடுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சியைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் புதன்கிழமையும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். கரோனா தடுப்பு உறுதிமொழியேற்ற பின்னா் பணிகளைச் செய்தனா். பேருந்து நிலையம், சாலைகள், மக்கள் கூடும் இடங்களில் தொடா்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் பாா்வையிட்டு உற்சாகப்படுத்தினாா். மாநகர நல அலுவலா் சத்தீஷ்குமாா் தலைமையில் மாநகராட்சி மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கரோனா தடுப்புப் பணிக்கு உதவும் வகையில் மாநகராட்சி மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்கள் எப்போதும் தயாா் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com