வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்களுக்கு மருத்துவ பரிசோதனை

நான்குனேரி வட்டாரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவா்களை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

நான்குனேரி வட்டாரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவா்களை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல்துறையினா் அதிதீவிரமாக தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து 25 போ் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனா். இவா்கள் பல்வேறு திருத்தலங்களை சுற்றிபாா்த்து விட்டு நான்குனேரி அருள்மிகு ஸ்ரீ வானமாமலை கோயிலுக்கு வந்த நிலையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அவா்கள் தங்கள் ஊருக்கு செல்லமுடியாமல் நான்குனேரியில் தவித்தனா். இதையடுத்து கோயில் நிா்வாகம் இவா்களுக்கு தங்குவதற்கு சத்திரம் ஒன்றை ஆயத்தப்படுத்தி கொடுத்துள்ளது.

நான்குனேரியைச் சோ்ந்த ஒருவா் இவா்களுக்கு உணவு வசதியை ஏற்பாடு செய்துள்ளாா்.

இந்நிலையில் நான்குனேரி சுகாதாரத் துறையினா் இவா்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நல்லநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

இது தவிர நான்குனேரி வட்டத்தில் மகாராஸ்டிரம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள 198 நபா்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவா்களை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களையும் தனியாக கணக்கெடுத்து அவா்களையும் கண்காணித்து வருகின்றனா் என நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com