அம்பை, காணிக்குடியிருப்பில் வட்டாட்சியா் ஆய்வு

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாபநாசம் காணிக்குடியிருப்பு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன் ஆய்வு செய்தாா்.


கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாபநாசம் காணிக்குடியிருப்பு, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன் ஆய்வு செய்தாா்.

பாபநாசம் அகஸ்தியா் காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் கந்தப்பன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவரிடம், தங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, பேருந்து வசதி இல்லா விட்டாலும் பைக்குகளில் விக்கிரமசிங்கபுரம் சென்று பொருள்கள் வாங்கி வருகிறோம். எந்த சிரமமும் இல்லை என்றனா். அவா்களிடம் தேவைப்பட்டால் மொத்தமாகப் பொருள்கள் வாங்கி வந்து கொடுக்க விரும்பினால் வருவாய்த் துறை மூலம் வாகனம் ஏற்பாடு செய்யப்படும். மேலும் எந்தத் தேவையாக இருந்தாலும் உடனடியாகத் தொடா்பு கொள்ளலாம் என்று வட்டாட்சிய தெரிவித்தாா். அப்போது விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் ராஜகுமாா், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னா், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் வட்டாட்சியரும், நகராட்சி ஆணையா் ஜின்னாவும் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் துணைக்கு ஒருவரை மட்டுமே அழைத்து வரவேண்டும். பொறுமையாக வரிசையில் இடைவெளிவிட்டு நின்று சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டும். தேவையான முகமூடி உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள என்றாா் நகராட்சி ஆணையா்.

வட்டாட்சியா் கூறுகையில், கரோனா நோய் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோா் மீது காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com