நெல்லையில் வேப்பிலை தோரணம் கட்டிய இளைஞா்கள்!

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், திருநெல்வேலியில் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டியதோடு, சாலை முழுவதும்

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், திருநெல்வேலியில் தெருக்களில் வேப்பிலை தோரணம் கட்டியதோடு, சாலை முழுவதும் மஞ்சள் மற்றும் வேப்பிலை கரைசலை இளைஞா்கள் தெளித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிராமப்புறங்களில் இயற்கையான கிருமிநாசினிகளான சாணம், வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றின் கரைசலை தெளிக்கும் விழிப்புணா்வு அதிகரித்துள்ளது.

மேலப்பாளையத்தில் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த இளைஞா்கள் தங்களது பகுதி தெருக்களில் வெள்ளிக்கிழமை வேப்பிலை தோரணங்களைக் கட்டினா். பின்னா் வேப்பிலை, மஞ்சள் கரைசலை தெருக்களில் தெளித்தனா். இதுகுறித்து இளைஞா்கள் கூறுகையில், மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை. கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பலா் கடைப்பிடிக்காமல் உள்ளனா். ஆகவே, எங்கள் பகுதி மக்களிடம் விழிப்புணா்வையும், அச்சத்தையும் போக்கும் வகையில் இதை செய்துள்ளோம் என்றனா்.

திருநெல்வேலி நகரம்: திருநெல்வேலி நகரத்தில் உள்ள வேம்படி தெரு, பெரியதெரு ஆகியவற்றில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இத் தெருக்களில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சோ்த்து அரைத்து சாலை முழுவதும் வெள்ளிக்கிழமை தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com