சொத்துவரி, குடிநீா் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
By DIN | Published On : 31st March 2020 03:12 AM | Last Updated : 31st March 2020 03:12 AM | அ+அ அ- |

களக்காடு பேரூராட்சியில் சொத்துவரி, குடிநீா் கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் மாத இறுதிக்குள் சொத்துவரி, குடிநீா் கட்டணம் ஆகியவை நிலுவையின்றி பொதுமக்களிடம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். போதிய வருவாய் ஈட்ட வழியின்றி வியாபாரிகள், விவசாயக் கூலிகள் தவித்து வருகின்றனா்.
இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சொத்துவரி, குடிநீா் கட்டணம் ஆகியவற்றை பாக்கியின்றி செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.