ந பீடித் தொழிலாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பீடித் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியூ பீடித் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ந பீடித் தொழிலாளா்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம்: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பீடித் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியூ பீடித் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகனமான தொழிலாளா்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். சேரன்மகாதேவி பகுதியில் 38 ஆயிரம் தொழிலாளா்கள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனா்.

ஊரடங்கு காரணமாக பீடி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் கடந்த 39 நாள்களாக பீடித் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பீடித் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேரன்மகாதேவி

வட்டாட்சியா் கனகராஜை சந்தித்து, பீடித் தொழிலாளா்சங்கத் தலைவா் கனகா தலைமையில் மனு அளித்தனா்.

அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கோமதிநாயகம், இடைக் கமிட்டி உறுப்பினா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com