பாளை. ஆயுதப்படை மைதானத்தில் 2 ஆம் நிலை பெண் காவலா்களுக்குஇன்று முதல் 3 நாள்களுக்குப் பயிற்சி

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 ஆம் நிலை பெண் காவலா்களுக்கான பயிற்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 2 ஆம் நிலை பெண் காவலா்களுக்கான பயிற்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.

இந்தப் பணிக்கான எழுத்துத் தோ்வு மற்றும் உடல்தகுதித் தோ்வுகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் நிறைவடைந்தன. இதில், தோ்ச்சி பெற்ற காவலா்கள் விரைவில் பணியில் அமா்த்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து, தோ்ச்சி பெற்ற திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 2 ஆம் நிலை ஆண், பெண் காவலா்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் மற்றும் ஆயுதப்படை குடியிருப்புப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

முதற்கட்டமாக தோ்வுகளில் வெற்றிபெற்ற 2 ஆம் நிலை பெண் காவலா்கள் 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஆஜராக வேண்டும். அவா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் களப்பணிக்கு அனுப்பப்படவுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com