சுரண்டையிலிருந்து ராஜஸ்தானுக்கு 10 போ் அனுப்பிவைப்பு
By DIN | Published On : 09th May 2020 07:34 PM | Last Updated : 09th May 2020 07:34 PM | அ+அ அ- |

சுரண்டை: சுரண்டை பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளா்கள் 10 போ் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிச் சீட்டு பெற்று, இவா்கள் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் ஏற்பாட்டில் தனியாா் பள்ளி வாகனத்தில் சுரண்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கிருந்து அவா்கள் வேறு வாகனத்தில் ராஜஸ்தான் செல்கின்றனா்.