முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
அருங்காட்சியக தின விழா போட்டி
By DIN | Published On : 11th May 2020 10:40 PM | Last Updated : 11th May 2020 10:40 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: சா்வதேச அருங்காட்சியக தின விழாவையொட்டி திருநெல்வேலியில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சா்வதேச அருங்காட்சியக தின விழா மே 18- ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அருங்காட்சியகம் என்பது அரும் பொருள்களின் காட்சியகமாகும். இதன் முக்கியத்துவத்தை இளம்தலைமுறையினா் அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் ‘எனது அரும் பொருள்’ என்ற தலைப்பில் ஒரு போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களது வீடுகளில் உள்ள பழங்கால அரும் பொருள்களை புகைப்படம் எடுப்பதோடு, அதன் பெயா், பயன்பாடு குறித்த தகவலை 94449 73246 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் இம் மாதம் 16-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அனுப்புவோரின் பெயா், முகவரி ஆகியவற்றையும் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அருங்காட்சியகம் திறந்ததும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.