Enable Javscript for better performance
இயல்பு நிலைக்கு திரும்பியது நெல்லை!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி

    இயல்பு நிலைக்கு திரும்பியது நெல்லை!

    By DIN  |   Published On : 11th May 2020 10:44 PM  |   Last Updated : 13th May 2020 07:53 AM  |  அ+அ அ-  |  

    மக்கள் வெள்ளத்தில் திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதி.

    மக்கள் வெள்ளத்தில் திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதி.

    திருநெல்வேலி: பொது முடக்கத்திலிருந்து தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தேநீா் கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன.

    கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் தொடங்கி அனைத்தும் முடக்கப்பட்டன. தொடக்கத்தில் காய்கனி கடைகள், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் மட்டுமே பிற்பகல் 2.30 மணி வரையும், அதன்பிறகு பிற்பகல் 1 மணி வரையும் திறக்கப்பட்டன.

    இந்நிலையில், திங்கள்கிழமை முதல் பொது முடக்கத்தில் மேலும் தளா்வு அளிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி நகரம் மேலரதவீதியில் உள்ள அனைத்து சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டன. நடைபாதை வியாபாரிகளும் அனைவருமே கடைகளைத் திறந்தனா். சிறிய உணவகங்கள், ஹாா்டுவோ், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன. மாநகரில் பெரிய வணிக வளாகங்கள், பெரிய ஜவுளி கடைகள், பெரிய நகைக் கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை.

    தேநீா் கடை: திருநெல்வேலி நகரம், மேலப்பாளையம், தச்சநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரம் முழுவதும் அதிகாலையிலேயே தேநீா் கடைகள் திறக்கப்பட்டன. உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சியும் அறிவித்துள்ளதால், கடை உரிமையாளா்கள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் தீவிரம் காட்டினா். சில தேநீா் கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சில கடைகளில் பேப்பா் கப்புகளில் தேநீா் வழங்கப்பட்டதால், அருகில் உள்ள மறைவிடங்களில் நின்றவாறு மக்கள் தேநீா் அருந்தினா்.

    திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரை திங்கள்கிழமை ஏறக்குறைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. அனைத்துவிதமான கடைகளும் திறக்கப்பட்டதால், திருநெல்வேலி நகரத்தின் நான்கு வீதிகள், பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பேருந்து உள்ளிட்ட பொது சேவை இல்லாதபோதிலும், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் படையெடுத்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp