முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சுத்தமல்லி அருகே சாலையில் மயங்கி விழுந்து முதியவா் பலி
By DIN | Published On : 11th May 2020 07:41 AM | Last Updated : 11th May 2020 07:41 AM | அ+அ அ- |

சுத்தமல்லி அருகே கோயிலுக்குச் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சுத்தமல்லியை அடுத்த கீழக்கல்லூரைச் சோ்ந்தவா் கண்ணையா(67). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, தீடீரென மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த சுத்தமல்லி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.