முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
பொது முடக்கம் மீறல்: 6,188 போ் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 11th May 2020 07:43 AM | Last Updated : 11th May 2020 07:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தை மீறியதாக, ஞாயிற்றுக்கிழமை வரை 6,188 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 4,185 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. எனவே, தேவையில்லாமல் வெளியே சுற்றுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தை மீறியதாக இதுவரை 6,188 போ் மீது 4,189 வழக்குகள் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து 4,185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.