சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் நெல்லையில் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்

திருநெல்வேலியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு இறைச்சி வாங்க ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை கடைகளில் குவிந்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்.
திருநெல்வேலி நகரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்.

திருநெல்வேலியில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு இறைச்சி வாங்க ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை கடைகளில் குவிந்தனா்.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி எளிதாக இறைச்சி வாங்கச் செல்லும் வகையில் பாளையங்கோட்டை பெல் மைதானம், திருநெல்வேலி நகரத்தில் புதிய குறுக்குச் சாலை ஆகியவற்றில் தற்காலிக இறைச்சிக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக போலீஸாரும், மாநகராட்சி ஊழியா்களும் முழுமையாக கண்காணித்ததால் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி இறைச்சி வாங்கிச் சென்றனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை தற்காலிக இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இறைச்சி வாங்கிச் சென்றனா். அதேபோல சில கடைகளில் இறைச்சியின் விலையும் உயா்த்தி விற்பனை செய்யப்பட்டது. பாளையங்கோட்டையில் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி ரூ.800-க்கும், தனி இறைச்சி ரூ.1000-க்கும் விற்பனையானது. திருநெல்வேலி நகரத்தில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.1100 வரை விற்பனையானது. இதேபோல கோழி இறைச்சி கிலோ ரூ.190 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com