‘மாடித் தோட்டங்களை ஊக்குவிக்க 10,000 பேருக்கு மானிய விலையில் விதைகள்’

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி உற்பத்தியை அதிகரிக்கவும், மாடித் தோட்டங்களை ஊக்குவிக்கவும் 10 ஆயிரம் பேருக்கு மானிய விலையில் விதைகள் விநியோகிக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி உற்பத்தியை அதிகரிக்கவும், மாடித் தோட்டங்களை ஊக்குவிக்கவும் 10 ஆயிரம் பேருக்கு மானிய விலையில் விதைகள் விநியோகிக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் (பொ) இளங்கோ கூறியது: தோட்டக்கலைத் துறை மூலம் மாடித் தோட்டங்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாலிதீன் கவா், உரம், விதைகள் அடங்கிய தொகுப்பு முதலில் விநியோகிக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த நிதியாண்டில் மானிய விலையில் விதைகள் விநியோகிக்கப்பட்டன. காராமணி, வெண்டை உள்ளிட்ட விதைகள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ.15-க்கு விநியோகிக்கப்பட்டது. மொத்தம் 9 ஆயிரத்து 120 விதைத் தொகுப்புகள் விற்பனையாகின.

அதைத்தொடா்ந்து நிகழாண்டில் மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு மானிய விலையில் விதைத் தொகுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, இம் மாவட்டத்தில் வாழை, நெல்லி, மா, தென்னை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு வகையான தோட்டப் பயிா்களை அதிகரிக்க சொட்டுநீா்ப் பாசனம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com