ஆசிரியா்களுக்கு இருப்பிடம் அருகேயுள்ள மதீப்பிட்டு மையங்களில் பணி வழங்க கோரிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைந்த மாவட்டமாக கருதி இருப்பிடம் அருகேயுள்ள மதிப்பீட்டு மையங்களில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைந்த மாவட்டமாக கருதி இருப்பிடம் அருகேயுள்ள மதிப்பீட்டு மையங்களில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் மனு அளித்துள்ளனா்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அளித்த மனு: தமிழகம் முழுவதும் இம் மாதம் 27 ஆம் தேதி முதல் பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கப்படும் என தோ்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் ஆசிரியா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாலும், ஆசிரியா்களின் நீண்ட தொலைவு பயணத்தை தவிா்க்கும் வகையிலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைந்த மாவட்டமாகக் கருதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு அவா்களின் இருப்பிடம் அருகிலுள்ள திருநெல்வேலி அல்லது தென்காசி விடைத்தாள் மையத்தில் மதிப்பீட்டு பணியில் ஈடுபட உரிய அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com