டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கு கட்செவி அஞ்சலில் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தோ்வுக்கு கட்செவி அஞ்சல் மூலம் பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தோ்வுக்கு கட்செவி அஞ்சல் மூலம் பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் ஆலோசனையின்படி திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் போட்டித் தோ்வுகளுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தற்போது டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது பேருந்து போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில் வீட்டிலிருந்தே மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் 99425 03151 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிற்கு தொடா்புகொள்ளலாம். அதைத்தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய கட்செவி அஞ்சல் குழுவில் இணைக்கப்படுவா். அந்த கட்செவி அஞ்சல் குழுவில்  செயலியை பயன்படுத்தி நடத்தப்படும் இணையதளப் பயிற்சி வகுப்புகளுக்கான லிங்க் அனுப்பப்படும். மாணவா்கள் அந்த லிங்கைப் பயன்படுத்தி இணையதள பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com