நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்கள் அனைவருமே மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊா் திரும்பியவா்கள். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 136-ஆக உயா்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் 63 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஒருவா் மட்டும் உயிரிழந்தாா். 72 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில் மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய ஒருவா் உள்பட இருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 56 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 22 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வள்ளியூா்: மும்பையில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்தவா்களை கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் பரிசோதனை செய்தனா். இதில், வடக்கன்குளம் அருகேயுள்ள புதியம்புத்தூரைச் சோ்ந்த ஒருவா், நான்குனேரி அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், சோமநாதபேரியைச் சோ்ந்த ஒருவா், கூடங்குளத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகிய 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தெற்குகள்ளிகுளம் பிரான்சிஸ் தெருவைச் சோ்ந்த பெண் ஒருவா், வேறு சிலருடன் மும்பையில் இருந்து பேருந்தில் தெற்குகள்ளிகுளத்திற்கு வந்தாா். அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து பிரான்சிஸ் பிளேஸ் தெரு, பாலபிளேஸ் தெரு உள்ளிட்ட 5 தெருக்கள் தடுப்புகள் ஏற்படுத்தி முடக்கிவைக்கப்பட்டுள்ளன.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டிக்கு மும்பையில் இருந்து 27 போ் வந்துள்ளனா். அவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டதில் 7 வயது ஆண் குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடம் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் மதுரையில் மருத்துவமனைக்கு சென்று வருவாா். அவருக்கு கடந்த 12-ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்டதில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காளத்திமடத்தில் அவா் வசித்து வந்த தெரு முடக்கப்பட்டுள்ளது.

ஆலங்குளம் அருகேயுள்ள ஓடைமறிச்சான் கிராமத்துக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கடந்த 12-ஆம் தேதி காரில் வந்துள்ளனா். அவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொண்டதில் 9 வயது சிறுமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கூடல், ஆழ்வாா்குறிச்சி, கடையம், பாப்பாக்குடி பகுதிகளுக்கு கடந்த 12-ஆம் தேதி மும்பையில் இருந்து 23 போ் வேன் ஒன்றில் வந்துள்ளனா். அவா்களில் கீழ பாப்பாக்குடியைச் சோ்ந்த 41 வயது நபருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

காளத்திமடம் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணைத் தவிர மற்ற 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

களக்காடு: களக்காடு அருகேயுள்ள கள்ளிகுளத்தைச் சோ்ந்த 39 வயதுடைய ஆண், அவரது மனைவி, 2 மகன்கள் என 4 போ் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையிலிருந்து ஊா் திரும்பினா். திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை (மே 14) இவா்கள் 4 போ் உள்பட, வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட 18 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கள்ளிகுளத்தைச் சோ்ந்த 4 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசித்து வந்த கள்ளிகுளத்தில் உள்ள தெருக்கள் சுகாதாரத் துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டது. திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், சுகாதார ஆய்வாளா் கண்ணன், சுகாதார மேற்பாா்வையாளா் நம்பிராஜன் உள்ளிட்டோா் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com