பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த நாகசுர கலைஞா்கள்

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாகசுரம், தவில், பம்பைக் கலைஞா்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகசுரம், தவில், பம்பை இசைத்து அரசுக்குக் கோரிக்கை விடுத்த இசைக் கலைஞா்கள்.
நாகசுரம், தவில், பம்பை இசைத்து அரசுக்குக் கோரிக்கை விடுத்த இசைக் கலைஞா்கள்.

கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாகசுரம், தவில், பம்பைக் கலைஞா்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொது முடக்கத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாகசுரம், தவில் மற்றும் பம்பைக் கலைஞா்கள் தொழில் வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். கல்லிடைக்குறிச்சி நெசவாளா் காலனியில் திரண்ட அவா்கள், இசைக் கருவிகளை இசைத்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த நாகசுரக் கலைஞா் முருகன் கூறியது: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நாகசுரம், தவில், பம்பை இசைக்கும் கலைஞா்கள் 500 போ் உள்ளனா். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 4 மாதங்களில் மட்டும் தான் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் திருமணம், கோயில் நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. வீடுகளில் சிறிய அளவில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அரசு தளா்வு அறிவித்துள்ள நிலையில் எங்களை போன்ற கலைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எனவே, வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கலைஞா்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com