மும்பையில் இருந்து மானூா் பகுதிக்கு வந்த 35 பேருக்கு தனிமை கண்காணிப்பு

மும்பையில் இருந்து மானூா் பகுதிக்கு வாகனத்தில் வந்த 35 பேருக்கு கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் உள்ள மையத்தில்

மும்பையில் இருந்து மானூா் பகுதிக்கு வாகனத்தில் வந்த 35 பேருக்கு கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் உள்ள மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவா்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா்.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, மும்பை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனா்.

அவ்வாறு வருவோருக்கு திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அவா்கள் அனுமதிக்கப் படுகின்றனா்.

இந்நிலையில், மும்பையிலிருந்து தனியாா் வாகனம் மூலம் மானூா் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 35 போ் கயத்தாறு அருகே உள்ள பிராஞ்சேரி வழியாக வியாழக்கிழமை தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ளனா். தகவலறிந்த போலீஸாா், அவா்களை கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பினா்.

அங்கு அவா்களுக்கு சளி ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் கங்கைகொண்டான் சோதனைச் சாவடி அருகே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com