மது விற்றதாக இருவா் கைது:130 மதுபாட்டில்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st November 2020 01:43 AM | Last Updated : 01st November 2020 01:43 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அனுமதியின்றி மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மீலாது நபியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடையம் அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் மது விற்பதாக கடையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடையம் காவல் உதவி ஆய்வாளா் சரசையன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த வீரகேரளம்புதூா், வேத கோயில் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (47), வெங்கடாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசுந்தரம் மகன் ஆறுமுகம் (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.