மேலப்பாளையத்தில் தாமதமின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி மனு

மேலப்பாளையம் புகா் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் புகா் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு தாமதமின்றி மின் இணைப்பு வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனு: மேலப்பாளையம் ஹாமீம்புரம் தெருக்கள், ஆண்டவா் தெருக்கள், ஞானியாரப்பா நகா் தெருக்கள், பங்களாப்பாநகா் தெருக்கள் போன்ற தெருக்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் மேற்படி பகுதிகளில் காலிமனைகளில் வீடு கட்டுபவா்கள், வீடு கட்டிய பிறகு சம்பந்தப்பட்ட கமிட்டிகளிடம் சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தால் புதிதாக கட்டிய வீடுகளுக்கு மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக மேலப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் மேற்படி பகுதிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மின்சார வாரியம் மறுத்து வருகிறது.

புதிய மின் இணைப்பு வழங்காததால் தமிழக அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். மேலும், குடியிருப்புவாசிகளின் அன்றாட பணிகள், குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தாமதமின்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com