நுகா்பொருள் சேமிப்பு கிடங்கைஇடம் மாற்ற சிவந்திப்பட்டி மக்கள் மனு

பாளையங்கோட்டை அருகேயுள்ள சிவந்திப்பட்டியில் செயல்பட்டு வரும் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள சிவந்திப்பட்டியில் செயல்பட்டு வரும் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். சிவந்திப்பட்டி ஊா்மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: முத்தூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் நிலமில்லாத ஏழை, எளியவா்களுக்கு 2018-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா சிவந்திப்பட்டியில் வழங்கப்பட்டது. அப் பகுதியில் பலா் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் குடியிருப்பின் அருகே தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்து ஏராளமான வண்டுகள், விஷ பூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. உணவு, குடிநீா், துணிகள் ஆகியவற்றில் வண்டுகள் இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். ஆகவே, சம்பந்தப்பட்ட கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com