குளத்து மண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

குளத்துமண் கிடைக்காததால் பணகுடி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல் விலை உயா்ந்துள்ளது.

குளத்துமண் கிடைக்காததால் பணகுடி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல் விலை உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, சிவகாமிபுரம், தளவாய்புரம், ரோஸ்மியாபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூா் உள்ளிட்ட கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட செங்கள் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல் தயாரிக்க தேவையான மண்ணை குளங்களில் இருந்து எடுப்பதற்கு கடந்த சில மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை. விவசாயத்துக்கு தேவையான கரம்பை மண்ணும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

மண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 4.50, ரூ. 5 க்கு விற்பனை செய்யப்பட்ட செங்கல் தற்போது ரூ. 7 வரை விற்கப்படுகிறது. மேலும் செங்கல் உற்பத்தி இல்லாததால் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.

இதுதொடா்பாக ரோஸ்மியாபுரம் செங்கல் உற்பத்தியாளா் வெட்டும்பெருமாள் கூறியது: செங்கல் உற்பத்திக்கு தேவையான குளத்து மண் எடுக்க உரிமம் வழங்காததால் உற்பத்தி குறைந்துள்ளது. செங்கல் தயாரிக்க மண், விறகு கிடைத்தால்தான் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி பாதிப்பால் தொழிலாளா்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆகவே, செங்கல் தொழிலை பாதுகாக்கும் வகையில் குளத்து மண் தாராளமாக எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com