ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடவேண்டும் என பழவூா் கிராம முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்து விடவேண்டும் என பழவூா் கிராம முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் இசக்கியப்பன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை ராதாபுரம் கால்வாய் மற்றும் பழவூா் பெரியகுளத்திற்கு திருப்பி விடப்படும்.

தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாக கடலுக்குச் செல்லும் உபரி நீரை ராதாபுரம் பகுதியிலுள்ள குளங்களில் விவசாயப் பணிகளை தொடங்கும் வகையில் தண்ணீரை திறக்க வேண்டும். ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவா். மேலும், பழவூா் பெரியகுளத்தை ராதாபுரம் பாசனக் கால்வாயில் சோ்க்க வேண்டும். பழவூா் பெரியகுளம் கன்னியாகுமரி மாவட்டம் பொய்கை அணைப் பாசனக் குளமாக சோ்க்கப்பட்டுள்ளது. பொய்கை அணையின் கடைசி பாசனக் குளமான பழவூா் பெரியகுளத்துக்கு தண்ணீா் கிடைப்பதில்லை. இதனால், எப்போதும் பெரியகுளம் வடு காணப்படுகிறது. ஆகவே பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் உடனடியாக தண்ணீா் திறந்து விடவேண்டும். பழவூா் பெரியகுளத்தை ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் சோ்க்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com