வள்ளியூா் சுரங்க சாலைப்பணி தாமதம்: அனைத்துக் கட்சி சாா்பில் போராட முடிவு

வள்ளியூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே சுரங்க சாலைப்பணியைக் கண்டித்து அனைத்துக் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்போவதாக

வள்ளியூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே சுரங்க சாலைப்பணியைக் கண்டித்து அனைத்துக் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்போவதாக தேமுதிக மாவட்ட இணைச் செயலா் வள்ளியூா் விஜிவேலாயுதம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

வள்ளியூா்-திருச்செந்தூா் பிரதான சாலையில் ரயில்வே கிராஸிங் உள்ளது. இந்தப் பகுதியே செல்லும் வாகனங்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிா்க்கும் விதத்தில், இப்பகுதியில் சுரங்க சாலை அமைக்கும் திட்டம் ரூ. 15.7 கோடி செலவில் நடைபெற்றுவருகிறது.

இப்பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ரயில்வே கிராஸிங் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை ரயில்வே துறை துரிதமாக முடித்துவிட்டது. இதையடுத்து சுரங்க சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினா் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியுள்ளனா். ஆனாலும் இன்றுவரையில் பணிகள் முடிவுபெறவில்லை. இதனால் இந்தப் பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா். கனரக வாகனங்கள் 10 கி.மீ. தொலைவு சுற்றி தெற்குவள்ளியூா் வழியாக சென்று வருகின்றன. 18 மாதங்களில் முடிக்கப்படவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் 28 மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் பணிகள் முடிவுக்கு வரவில்லை.

இது தொடா்பாக பொறியாளா்கள் தெரிவிக்கப்பட்ட காலத்தில் முடிக்கப்படாவிட்டால் அனைத்துக் கட்சி சாா்பில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com