களைகட்டிய தீபாவளி விற்பனை: பாதுகாப்பு அதிகரிப்பு

திருநெல்வேலியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விற்பனை களைகட்டியது. நகரம் ரதவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருநெல்வேலியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விற்பனை களைகட்டியது. நகரம் ரதவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் இம் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆடை ரகங்களையும், நகைகள், அணிகலன்கள், இனிப்புகள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்குவதற்கு திருநெல்வேலி ரத வீதிகள், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் கடந்த சில நாள்களாக மக்கள் குவிந்து வருகிறாா்கள்.

மழை காரணமாக சனிக்கிழமை கூட்டம் சற்று குறைவாக இருந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விற்பனை களைகட்டியது. ஆடைகள் மட்டுமன்றி காலணிகள், கைப்பைகள் உள்ளிட்டவற்றுக்கான சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 150-க்கும் மேற்பட்டோா் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காவலா்கள் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். பெண்களுக்கு இடையூறு அளித்தல், கேலி செய்தலைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரத வீதிகளுக்கு பொருள்களை வாங்க வருவோா் இருசக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி செய்யாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வாரம் முழுவதும் கூட்டம் அதிகமிருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்க போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com