அம்பை வட்டார விவசாயிகள் கல்விச் சுற்றுலா

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி லாபகரமான பால் பண்ணை அமைத்தல் என்ற தலைப்பின்கீழ் சேரன்மகாதேவி அருகிலுள்ள பட்டன்காடு கிராமத்தில் அமைந்துள்ள நியூஸிலாந்து கறவைப் பசுமாட்டுப் பண்ணைக்கு அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா். பண்ணை மேலாளா் லோயல், கன்று, மாடுகளின் ரகங்கள், தோ்வு செய்யும் முறை, தீவன ரகங்கள்,உற்பத்தி, தீவனமிடுதல் முறைகள், மாடுகளைப் பராமரித்தல், கழிவுகளை சுத்தப்படுத்தும் முறைகள் மற்றும் பால் கறத்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தாா். இதில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com