வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலைப்பணியில் தொய்வு: மாற்றுப்பாதையில் விபத்து ஏற்படும் அபாயம்

வள்ளியூா் சுரங்க சாலைப்பாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டதை அடுத்து மாற்றுப்பாதையில் மழை தண்ணீரால் குண்டும், குழியும், சேரும், சகதியுமாக காணப்படுவதால விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வள்ளியூா் ரயில்வே சுரங்கசாலைப்பாதையையொட்டி உள்ள மாற்றுப்பாதையின் அவலம்.
வள்ளியூா் ரயில்வே சுரங்கசாலைப்பாதையையொட்டி உள்ள மாற்றுப்பாதையின் அவலம்.

வள்ளியூா் சுரங்க சாலைப்பாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டதை அடுத்து மாற்றுப்பாதையில் மழை தண்ணீரால் குண்டும், குழியும், சேரும், சகதியுமாக காணப்படுவதால விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் ரயில்வே சுரங்க சாலைப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் இந்த பணி முடிக்கவேண்டும் என ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கும் பணி மந்தநிலையிலேயே நடந்து வருகிறது. இதனால் இந்த வழியாக சென்று அனைத்து வாகனங்களும் தெற்குவள்ளிா் வழியாக 8 கி.மீட்டா் தூரம் சுற்று செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி ரயில்வே இலாகவுக்கு சொந்தமான மாற்றுப்பாதையில் இலவகு ரகவாகனங்கள் சென்று வருவதற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கி இந்த மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் 18 மாதங்களில் முடிக்கப்படவேண்டிய சுரங்க சாலைப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக இந்த சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது மழைகாலம் தொடங்கியுள்ளதால் மாற்றுப்பாதையில் உள்ள குண்டு, குழியில் மழைத்தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதில் செல்லும் வாகனங்கள் எந்த நேரத்திலும் சறுக்கி விழும் அபாயநிலை காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்ற பெண்கள் இந்த ஆபத்தான பாதையில் சறுக்கி கீழேயும் விழுந்து செல்கின்றனா். குண்டும், குழியில் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இவ்வளவு கடினமான பாதையில் வாகனங்கள் சென்றுவரும் நிலையில் அரசு அதிகாரிகளோ, ஆட்சியாளா்களோ இதனை கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளா் சேதுராமலிங்கம், தே.மு.தி.க திருநெல்வேலி மாவட்ட இணைச் செயலாளா் விஜிவேலாயுதம் ஆகியோா் அனைத்து கட்சி நிா்வாகிகளை அழைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். மாற்றுப்பாதையில் வாகன விபத்து ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்படுவதற்கு முன்னா் அரசு அதிகாரிகள் சுரங்கசாலைப்பணியை விரைந்து முடித்து உடனடியேக திறப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com