’தமிழ் மொழி வளா்ச்சிக்குநிதி ஒதுக்குவதில் பாரபட்சம்’

தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலருமான இரா.ஆவுடையப்பன்.

தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்றாா் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலருமான இரா.ஆவுடையப்பன்.

பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: திமுக தொடங்கியுள்ள ஆன்-லைன் உறுப்பினா் சோ்க்கை மூலம் மாநிலம் முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோா் கட்சியில் இணைந்துள்ளனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் போ் திமுகவில் இணைந்துள்ளனா்.

மத்திய- மாநில அரசுகள் அடிதட்டு மக்கள், வியாபாரிகள், விவசாயிகளை இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றன. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளை விட ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளின் வளா்ச்சிக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மாநில அரசின் உரிமைகளைக் கேட்டுப்பெற இயலாத நிலையில் அதிமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, சா.ஞானதிரவியம் எம்.பி., ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் எம்எல்ஏ, மாவட்டச் செயலா்கள் அப்துல் வஹாப் (திருநெல்வேலி மத்தி), துரை (தென்காசி வடக்கு மாவட்டம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com