முஸ்லிம்களுக்கு 7 % இடஒதுக்கீடு: தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 7 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான்.

முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 7 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் பொட்டல்புதூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். செயலா் அப்துல் பாஸித், பொருளாளா் சையது மசூது, துணைத் தலைவா் அப்துல்காதா், துணைச் செயலா்கள் காஜாமைதீன், புகாரி அப்துல் சலாம், மாணவரணிச் செயலா்அலாவுதீன், மருத்துவ அணிச் செயலா் யாசா், தொண்டா் அணி பீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான், மாநிலச் செயலா் காஞ்சி இப்ரஹிம், மேலாண்மைக் குழு உறுப்பினா் ஒலி முகமது ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயா்த்த வேண்டும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்தும் வழங்க வேண்டும், தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுல கிருஷ்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும், கோவிந்தப்பேரி கூட்டுறவு வங்கியில் பணத்தை மோசடி செய்த அலுவலா்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com