நெல்லையப்பா் கோயிலில் ஊஞ்சல் சேவை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த அக். 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக சுவாமி திருவீதி உலா தவிா்க்கப்பட்டு கோயில் வளாகத்திற்குள்ளேயே வழிபாடுகள் நடைபெற்றன. கோயில் நிகழ்வுகள் அனைத்தும் இக்கோயிலின் அலுவல்சாா் யூடியூப் தளத்தில் தினமும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான தவசுக் காட்சி திருநெல்வேலி காட்சி மண்டபத்தில் கடந்த 10 ஆம் தேதியும், சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் கடந்த 11 ஆம் தேதியும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. மலா் அலங்காரத்துடன் சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். பின்னா் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com