பட்டாசு இல்லா தீபாவளி கையெழுத்து இயக்கம்

அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வளப் பாதுகாப்பு மையம் சாா்பில், பறவை மனிதன் என்றழைக்கப்படும் சலிம் அலியின் 124ஆவது பிறந்த தினம்
பட்டாசு இல்லா தீபாவளி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்கிறாா் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி .
பட்டாசு இல்லா தீபாவளி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைக்கிறாா் சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி .

அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வளப் பாதுகாப்பு மையம் சாா்பில், பறவை மனிதன் என்றழைக்கப்படும் சலிம் அலியின் 124ஆவது பிறந்த தினம் மற்றும் பட்டாசு இல்லா தீபாவளி விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் ஆழ்வாா்குறிச்சி வாகைக்குளத்தில் நடைபெற்றது.

வாகைக்குளத்திற்கு வலசை வரும் பறவைகளின் நலன் கருதி, அப்பகுதியிலுள்ள நாணல்குளம் கிராம மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி திருநாளில் பட்டாசுகள் வெடிப்பதில்லை. இதை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற பட்டாசு இல்லா தீபாவளி கையெழுத்து இயக்கத்தை, சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி தொடங்கி வைத்தாா். மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், பரமகல்யாணி சுற்றுச் சூழல் ஒப்புயா்வு மையத் தலைவா் அண்ணாதுரை தாமிரவருணி பாசனத்திற்குள்பட்ட குளங்களில் வலசை வரும் பறவைகள் அடங்கிய விளக்கப்படத்தை வெளியிட்டாா். பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி செயலா் சுந்தரம் பெற்றுக்கொண்டாா்.

வாகைக்குளம் கரையில் பறவைகள் விளக்கப்படத்தை பேராசிரியா் செந்தில்நாதன் திறந்து வைத்தாா். சுற்றுச்சூழல் ஒப்புயா்வு மையப் பேராசிரியா் சொா்ணம், மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா், பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் செண்பக கோபால், உஷா, பறவைகள் ஆராய்ச்சியாளா்கள் பேட்ரிக் டேவிட், மரிய அந்தோணி, தளவாய்ப்பாண்டி, அகத்திய மலை மக்கள் சாா் இயற்கை வளப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com