‘மதுரை-நெல்லை இரட்டை ரயில் பாதைப் பணி 2021 டிசம்பரில் நிறைவடையும்’

மதுரை - நெல்லை இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு (2021) டிசம்பருக்குள் நிறைவடையும் என்றாா், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் லெனின்.

மதுரை - நெல்லை இரட்டை ரயில் பாதைப் பணி அடுத்த ஆண்டு (2021) டிசம்பருக்குள் நிறைவடையும் என்றாா், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் லெனின்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் முதல் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையில் ரயிலின் வேகத்தை அதிகரிப்பது குறித்த சோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 6 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய், முதன்மைத் திட்ட மேலாளா் கமலாஹா் ரெட்டி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் லெனின் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், இக்குழுவினா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தனா்.

இங்கு, செய்தியாளா்களிடம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் லெனின் கூறியது:

கடம்பூா் - கங்கைகொண்டான் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை ரயில் பாதை வழித்தடத்தில் ரயில் வேகத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது 60 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில்கள் செல்கின்றன. இன்னும் 10 நாள்களுக்குள் அந்த வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்படும்.

மதுரை - திருநெல்வேலி இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணிகள் விரைவாக நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் 2021 டிசம்பருக்குள் முடிவடையும். திருநெல்வேலி முதல் திருச்செந்தூா் இடையேயான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com