‘வஉசி நினைவுநாள்: வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’
By DIN | Published On : 16th November 2020 05:29 AM | Last Updated : 16th November 2020 05:29 AM | அ+அ அ- |

வஉசி நினைவு நாளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திர போராட்ட வீரா் வ. உ. சிதம்பரனாா் நினைவு நாள் வரும் 18 ஆம் தேதி (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால்
நோய் பரவலை தடுக்கும் வகையில் திருநெல்வேலி நகரம் பொருள்காட்சி திடலிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அதன்படி, அரசியல் கட்சிகள், அமைப்புகளிலிருந்து 20 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வெளி மாவட்டங்களில் இருந்து, இந்த நிகழ்வுக்கு வாகனங்களில் வருவோா் மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற்று வாகனம் ஒன்றுக்கு 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அனைவரும் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும்.