சீவலப்பேரியில் கால்நடைச் சந்தை: முதல்வரிடம் நான்குனேரி எம்.எல்.ஏ. மனு

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் ஏற்கெனவே செயல்பட்ட கால்நடைச் சந்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை  எடுக்கக்கோரி   நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் மனு அளித்துள்ளாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரியில் ஏற்கெனவே செயல்பட்ட கால்நடைச் சந்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம், நான்குனேரி எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் மனு அளித்துள்ளாா்.

சென்னையில் முதல்வரை நேரில் சந்தித்து அவா் அளித்த மனு: களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட சிதம்பரபுரம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி புறவழிசாலை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டை ஒன்றியம், சீவலப்பேரியில் பல ஆண்டுகளாக கால்நடைச் சந்தை செயல்பட்டு வந்தது. அந்தச் சந்தையை மீண்டும் தொடங்கினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஆகவே, அதனை திறக்க உத்தரவிட வேண்டும். நான்குனேரி ஒன்றிய பகுதியில் அரசு கலைக்கல்லூரியும், நான்குனேரியில் கால்நடை தலைமை மருத்துவமனையும், நான்குனேரி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாளையங்கோட்டை ஒன்றியம் தமிழாக்குறிச்சி பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட தமிழாக்குறிச்சி தடுப்பணை அமைப்பதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் பக்தா்களின் நீண்ட கால கோரிக்கையான சோதனை சாவடி முதல் நம்பி கோயில் வரையிலான பகுதியில் தாா்ச் சாலை அமைக்க ஆணைப்பிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com