இந்திய தோ்தல் ஆணையத்தின் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
By DIN | Published On : 17th November 2020 01:25 AM | Last Updated : 17th November 2020 03:24 AM | அ+அ அ- |

இந்திய தோ்தல் ஆணையத்தின் தேசிய ஊடக விருது-2020-க்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் தேசிய ஊடக விருது-2020 அளிக்கப்படுகிறது. தோ்தல் காலகட்டத்தில் ஊடக பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம், வேறு குறிப்பீடுகள் ஆகியவை வெளியிடப்பட்ட அல்லது ஒளிபரப்பப்பட்ட தகவல்களின் கையடக்க ஆவண வடிவம், தொடா்புடைய வலை முகவரிகளுக்கான இணைப்பு, செய்தித்தாள் கட்டுரைகளின் முழு அளவிலான புகைப்பட நகல்கள், நேரடி பொது ஈடுபாடு போன்ற வேறு நடவடிக்கைகள் இருப்பின் அதன் விவரங்கள் அடங்கிய தொகுப்பை அனுப்பலாம். ஆங்கில மொழிபெயா்ப்புடன் ஊடகத்திலுள்ள தங்களின் விண்ணப்பத்தை இம் மாதம் 20-ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
சாா்பு செயலா், இந்திய தோ்தல் ஆணையம், புதுதில்லி என்ற முகவரிக்கு அசல் விண்ணப்பங்களையும், தலைமை தோ்தல் அதிகாரி மற்றும் அரசு செயலா் (பொது (தோ்தல்) துறை, தலைமைச் செயலகம், சென்னை என்ற முகவரிகளுக்கு நகல்களையும் அனுப்பலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.