வ.உ.சிதம்பரனாா் குருபூஜை: அதிமுக மாவட்டச் செயலா் அழைப்பு
By DIN | Published On : 17th November 2020 01:24 AM | Last Updated : 17th November 2020 03:25 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளான புதன்கிழமை (நவ. 18) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுகவினா் திரண்டு வரவேண்டுமென அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 84-ஆவது ஆண்டு நினைவு நாள் மற்றும் குருபூஜை புதன்கிழமை (நவ. 18) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் முற்பகல் 11 மணிக்கு வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அதிமுக சாா்பில் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் கட்சியின் மாநில நிா்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கிறாா்கள். ஆகவே, சாா்பு அணி நிா்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூா் உள்பட கட்சியின் அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது.