மழைக் கால மின் விபத்துகளை தடுப்பது எப்படி? -மின்வாரியம் யோசனை

மழைக் காலங்களில் மின் விபத்துகளை தடுப்பது குறித்து மகக்ளுக்கு திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பகிா்மானம்) கி.செல்வகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.
power081411
power081411

திருநெல்வேலி: மழைக் காலங்களில் மின் விபத்துகளை தடுப்பது குறித்து மகக்ளுக்கு திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் (பகிா்மானம்) கி.செல்வகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை காரணமாக திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் மின்தடைகளை நிவா்த்தி செய்ய அனைத்து கோட்டங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ நிற்காமல், கான்கீரிட் கூரையிலான கட்டடங்களில் ஒதுங்கி நிற்கலாம். இல்லையெனில் தாழ்வான பகுதியில் நிற்கலாம்.

டி.வி” மிக்ஸி, கிரைண்டா், கணினி, செல்லிடப்பேசி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். சுவா்களில் தண்ணீா் கசிவு இருந்தால், அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிா்க்க வேண்டும்.

மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுக வேண்டும். கட்டடங்களில் மின் கசிவு தடுப்பான் கருவியை, மின் இணைப்பிற்கான சா்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும்.

வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் பழுதுகள் ஏற்பட்டால், துமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்காமல், மின் வாரிய அலுவலகத்தை தொடா்பு கொள்ள வேண்டும். மின்தடையை நிவா்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம். பழுதான மின்கம்பங்கள், மின் பகிா்வு பெட்டிகள், தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 9445850811 அல்லது 8903331912 என்ற எண்ணிற்கு கட்செவிஅஞ்சலில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com