கரோனா தடுப்பு வழிமுறைகள்: ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்தல்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை ரயில் பயணிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை ரயில் பயணிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென ரயில்வே பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே பாதுகாப்புப் படைசாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அதிகரிக்கப்பட்டு வரும் சூழலில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால் ரயில் நிலையங்கள், ரயில்கள் அல்லது பிற ரயில் பகுதிகளில் இருக்கும்போது ரயில்வே வழங்கிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பயணிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக் கவசங்களை சரியாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்று உறுதியானால் ரயில் பயணத்தை ரத்து செய்யவேண்டும். கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தாலும் பயணத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே பகுதி அல்லது ரயில் நிலையத்தை பாா்வையிடவோ அல்லது ரயிலில் ஏறவோ கூடாது.

ரயில் நிலையத்தில் சுகாதார பரிசோதனைக் குழுவினரால் பயணத்தை மேற்கொள்ள மறுக்கப்பட்டால் நீங்கள் ரயிலில் ஏறக் கூடாது. பொது இடத்தில் எச்சில் உமிழக் கூடாது. அசுத்தமான அல்லது சுகாதாரமற்ற நிலைமைகளை உருவாக்கும் அல்லது ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இத்தகைய அனைத்து வழிகாட்டுதல்களையும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com