திருந்திய நெல் சாகுபடி: வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

வள்ளியூா் பகுதியில் திருந்திய நெல் சாகுபடி வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.
வள்ளியூா் வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி வயல்களை பாா்வையிட்டாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன்.
வள்ளியூா் வட்டாரத்தில் திருந்திய நெல் சாகுபடி வயல்களை பாா்வையிட்டாா் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன்.

வள்ளியூா் பகுதியில் திருந்திய நெல் சாகுபடி வயல்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.

வேளாண் துறை சாா்பில் வள்ளியூா் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை சாகுபடி செய்யும் திட்டம் உள்பட பல்வேறு செயல்படுத்தப்பட்டுள்ளன. அச்சம்பாடு, ஆனைகுளம், தனக்கா்குளம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்துள்ள உளுந்து பயிா்களை திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வள்ளியூா் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருந்திய நெல் சாகுபடி வயல்களை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா். துணை இயக்குவா் (மத்திய திட்டம்) சுந்தர டேனியல் பாலஸ் , நெல் பயிரில் கடைப்பிடிக்கவேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா். அப்போது, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுனில் தத், வேளாண்மை அலுவலா் காா்த்திகேயன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சுந்தா், ஷிபா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com