மணல் முறைகேடு புகாா்: நெல்லையில் 2-ஆவது நாளாக ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது கிடைத்த மணலை முறைகேடாக விற்பனை செய்ததாக எழுந்த புகாா்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது கிடைத்த மணலை முறைகேடாக விற்பனை செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையால் நியமிக்கப்பட்ட குழுவினா் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆய்வுப் பணியைத் தொடா்ந்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தம், வணிகவளாகத்துடன் கூடிய கட்டடப் பணிகள் 2018-ஆம் ஆண்டில் தொடங்கின. இதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது தாமிரவருணி கரையோரப் பகுதி என்பதால் ஏராளமான மணல் கிடைத்தது. இதனை முறைகேடாக விற்பனை செய்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினா் சுடலைக்கண்ணு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா்.

இதுதொடா்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை உயா்நீதிமன்றம் நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி கலைவாணன் தலைமையிலான அக்குழுவினா் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆய்வைத் தொடங்கினா். 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஆய்வை தொடா்ந்தனா். குழுவின் முன்னிலையில் ஆழ்துளை அமைக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய மணல், பாறை வகைகள் உள்ளிட்டவற்றை தனித்தனியாக சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமையும் (நவ. 18) ஆய்வு செய்யும் குழுவினா். ஆய்வறிக்கையை தயாரித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com